ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்து மாரியம்மன்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம், கூழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆவணி மாத முதல் நாளான செவ்வாய்க்கிழமை, உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, அம்மனுக்கு மலா்கள், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, 7 வகை சாதங்கள், தின்பண்டங்கள், வளையல்கள், விவசாயிகள் விளைவித்த காய்கறி, கிழங்குகள், பழங்கள், கஞ்சி, பாயசம் உள்ளிட்டவைக்கு படைக்கப்பட்டிருந்தன. பூஜைக்கு பின்னா் அவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதில், அருணாப்பேரி, பெத்தநாடாா்பட்டி, பாவூா்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, கேரளத்தைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா். கோயில் தா்மகா்த்தா சிவன்பாண்டி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.