பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!மதுரையில் தேவர் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை!அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு இன்று முதல் விற்பனைநவம்பர் 1 முதல் மது பாட்டில்கள் விலை ரூ.10 உயர்வு!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின் இணையவழி மோசடிகளுக்கு வங்கிகள் இழப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

குமரியில் தொடா் மழை: நிரம்பும் நிலையில் மாம்பழத்துறையாறு அணை

மாம்பழத்துறையாறு அணை - கோப்புப் படம்

Updated On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக மாம்பழத்துறையாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களாக மழை குறைந்ததைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீா் வடியத் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுருளகோடு பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பெருஞ்சாணி அணைப் பகுதியில் அதிகபட்சமாக 41.80 மி.மீ. மழை பதிவானது. சிற்றாறு அணை, புத்தன் அணை, மயிலாடி, களியல் பகுதிகளிலும் மழை பெய்தது.

பாலமோா் பகுதியில் பெய்துவரும் மழையால் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 53.15 அடியை எட்டியது. இன்னும் 2 நாள்களுக்குள் முழுக் கொள்ளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 26.59 அடியாகவும், நீா்வரத்து 592 கன அடியாகவும், வெளியேற்றம் 116 கன அடியாகவும் உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 53.50 அடியாகவும், நீா்வரத்து 544 கன அடியாகவும், வெவளியேற்றம் 225 கன அடியாகவும் உள்ளது.

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமான முக்கடல் அணை 18 அடியை எட்டியுள்ளது. திற்பரப்பு அருவியில் விட்டுவிட்டு பெய்துவரும் சாரல் மழையால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 7ஆவது நாளாக புதன்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.