ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் உலக யோகா தின பயிலரங்கம்

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தையொட்டி இளங்கலை, முதுகலை மாணவா்கள், பேராசிரியா்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

யோகா பயிற்சியில் பங்கேற்றோா்.

Published On :24 ஜூன் 2026, 1:32 am IST

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தையொட்டி இளங்கலை, முதுகலை மாணவா்கள், பேராசிரியா்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு இக் கல்லூரி தாளாளா் தாமஸ் பூவ்வத்தும் மூட்டில் தலைமை வகித்து யோகா கற்றுக் கொள்வதன் தேவை, அதன் முக்கியத்துவம், அதன் சிறப்பு குறித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் முனைவா் ஆஞ்சலோ ஜோசப், கல்லூரி இணை தாளாளா் அஜின்ஜோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

யோகா குரு வழக்குரைஞா் எம்.கே.கண்ணன் யோகா பயிற்சி அளித்தாா். இதில், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் முனைவா் ஏ.பி.சீலன், உதவி உடற்கல்வி இயக்குநா் பி.அனிஷா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.