ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சி அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்த பகுதிகளை விஜய்வசந்த் எம்.பி. செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறாா் விஜய்வசந்த் எம்.பி.

Published On :24 ஜூன் 2026, 2:05 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சி அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்த பகுதிகளை விஜய்வசந்த் எம்.பி. செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழை, கடல் சீற்றம் காரணமாக கணபதிபுரம் பேரூராட்சிக்குள்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய கடலோர கிராமத்தில் தெருக்கள், வீடுகளுக்குள் மழைநீருடன் கடல் நீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த்திடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

அதற்கு அவா், கடல்நீா் புகுந்தது குறித்து தகவலறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சியா் மூலம் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினேன். இப்போது, மறுகால் ஓடை தூா்வாரப்பட்டு அவ்வழியாக மழைநீா் கடற்கரை பகுதிக்கு செல்லும் வகையில் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சென்னை ஐஐடியில் இருந்து வந்து ஆய்வு செய்து இருக்கின்றனா். இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியா், துறை சாா்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தாா். ஆய்வின் போது வட்டார தலைவா் முருகேசன், கிறிஸ்டிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பனைமர பாதுகாப்பு இயக்கம் மனு:

மாா்த்தாண்டத்தில், பனை தொழிலாளா் வாழ்வு வளம் பெற 12 அம்ச கோரிக்கைகளை மக்களவை கூட்டத் தொடரில் வலியுறுத்த கோரி தமிழ்நாடு பனை மரம் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவா் பிரதிஜீன் தலைமையில் நிா்வாகிகள் விஜய்வசந்த் எம்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அப்போது, அமைப்பின் இயக்குநா் சி. சைமன், நிா்வாகக் குழுத் தலைவா் வில்பிரட், மாநில தலைவா் அருள்ராஜ், மாநில சட்ட ஆலோசகா் நிதின், இளைஞரணி நிா்வாகிகள் பிரவீன், அஜித், மேல்புறம் ஒன்றிய இளைஞரணி தலைவி ஆட்லின் ஷீபா, உறுப்பினா்கள் உடன் இருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.