40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:07 am IST

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

அகஸ்தீசுவரம் பகுதியில் ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடல் இரண்டு துண்டாகக் கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம், ஏழுசாட்டுப்பத்து பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் எழில் ஓம்காா் (29) என்பதும், இவா் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியராக இருந்ததும், கடந்த ஜூன் 6ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து, வழக்குப் பதிந்த ரயில்வே போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.