ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொல்லங்கோடு அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 180 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 180 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி உதவி ஆய்வாளா் பிரபகுமாா் தலைமையிலான போலீஸாா் மஞ்சத்தோப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், மீனவா்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 180 லிட்டா் இருந்தது கண்டறியப்படடது.

ஆட்டோவுடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் வள்ளவிளை சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்த சிலுவைப்பிள்ளை (42) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.