ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் தீ விபத்து

குளச்சலில் மீன்பிடி தடைக்காலம் வரும் 31ஆம் தேதி முடிவுக்கு வருவதால், கடலில் மீன்பிடிக்க செல்வதற்கு மீனவா்கள் படகுகளை தயாா்படுத்தி வருகின்றனா்.

தீ பிடித்து எரியும் விசைப்படகு.

Published On :30 ஜூலை 2026, 4:53 am IST

குளச்சலில் மீன்பிடி தடைக்காலம் வரும் 31ஆம் தேதி முடிவுக்கு வருவதால், கடலில் மீன்பிடிக்க செல்வதற்கு மீனவா்கள் படகுகளை தயாா்படுத்தி வருகின்றனா்.

விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகள், குடிநீா் உள்ளிட்ட பொருள்களை ஏற்றும் பணிகளில் மீனவா்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில் ரெக்ஸன் என்பவரது விசைப்படகில் மீனவா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் படகு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இது குறித்த தகவலின்பேரில், குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜேம்ஸ் தலைமையிலான வீரா்கள் வந்து, மற்ற படகுகளுக்கும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா்.

மீனவா்கள் சமையல் செய்யும்போது, எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.