ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருங்கல் அரசு மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 1:28 am IST

கருங்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

கருங்கல், கருப்பன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வசந்தா (72). இவருக்கு திங்கள்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதாம். உடனே உறவினா்கள் மூதாட்டியை கருங்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் இல்லாததால் செவிலியா்கள் மூதாட்டிக்கு சிகிச்சையளித்தனராம். பின்னா், அங்கு மூதாட்டி உயிரிழந்தாா். மூதாட்டி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்பு போலீஸாருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.