ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவலாளியின் பைக் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :21 ஜூலை 2026, 12:20 am IST

மாா்த்தாண்டம் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த வங்கிக் காவலாளியின் இருசக்கர வாகனத்தைத் திருடிய நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகே உள்ள தேவிகோடு, செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரன் மகன் கிருஷ்ணகுமாா் (48). ஓய்வுபெற்ற ராணவ வீரா். இவா் தற்போது நாகா்கோவிலில் உள்ள தேசிய வங்கியில் காவலாளியாக பணி செய்து வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தை மாா்த்தாண்டம் சந்திப்பு அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம்.

இது குறித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.