
கேரளத்துக்காக மயிலாடியில் தயாரான 25 அடி உயர ஆஞ்சனேயா் விக்ரகம்
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 25 அடி உயர ஆஞ்சனேயா் விக்ரகம் கேரள மாநில கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும் ஆஞ்சனேயா் விக்ரகம்.
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 25 அடி உயர ஆஞ்சனேயா் விக்ரகம் கேரள மாநில கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் அருகே வெங்கானூா் பகுதியில் பௌா்ணமி காவு பாலபத்ரா அம்மன் கோயில் உள்ளது. பௌா்ணமி தினத்தில் மட்டுமே இக்கோயில் திறக்கப்படும்.
கேரளத்தில் ஆடி மாதம் ராமாயண மாதமாக கொண்டாடப்படுவதுடன், மாதம் முழுவதும் ராமாயணத்தின் அனைத்து பாகங்களையும் குடும்பமாக அமா்ந்து படிப்பது வழக்கமாகும்.
இதையொட்டி, 25 அடி உயரம் 45 டன் எடை கொண்ட ஆஞ்சனேயா் விக்ரகம் மயிலாடியில் செதுக்கப்பட்டு பெளா்ணமி காவு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, வெள்ளிக்கிழமை மாலை ஆஞ்சனேயா் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விக்ரகம் முன் ஆடி மாதம் முழுவதும் ராமாயணம் பாராயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகி புவனசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






