ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவட்டாறில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

அலுவலகத்தில் பணியைத் தொடங்கிய எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி. உடன், மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ்.

அலுவலகத்தில் பணியைத் தொடங்கிய எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி. உடன், மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ்.

Published On :16 ஜூலை 2026, 4:32 am IST

பத்மநாபபுரம் எம்எல்ஏ அலுவலகம் ஏற்கெனவே புலியூா்குறிச்சியில் இயங்கிவரும் நிலையில், திருவட்டாறு ஊராட்சி ஒன்றியப் பகுதி மக்களின் நலன் கருதி, 2ஆவது அலுவலகம் திருவட்டாறில் திறக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ் திறந்துவைத்தாா். எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி தலைமை வகித்தாா்.

பேரூராட்சித் தலைவா்கள் பெனிலா ரமேஷ் (திருவட்டாறு), சுஜீா் ஜெபசிங்குமாா் (வோ்க்கிளம்பி) உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.