ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி

கருங்கல் அருகே தொழிலாளி தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

பலி - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 12:34 am IST

கருங்கல் அருகே தொழிலாளி தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (56). தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், வீட்டில் இவா் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மூசாரி பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து விசாரித்ததில், உயிரிழந்தது விஜயன் என்பது தெரிய வந்தது.

போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, அவரது இறப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.