ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி கடற்கரைச் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.

Published On :3 ஜூலை 2026, 4:18 am IST

கன்னியாகுமரி கடற்கரைச் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் தொடங்கி காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஜூன் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே, 150 கடைகளை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் அகற்றிய நிலையில், மீதமுள்ள கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் காவல் துறையினா் உதவியுடன் வியாழக்கிழமை அகற்றி, நடவடிக்கை மேற்கொண்டனா்.

இது குறித்து, நகராட்சி ஆணையா் பட்டுசாமி கூறும்போது, நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இப்பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்க முயன்றால் காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.