ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோதையாற்றில் வனத் துறை வலையில் 6 மாதங்களாக சிக்காத முதலை

கோதையாற்றில் வனத்துறையினா் விரித்துள்ள வலையில் சிக்காமல் 6 மாதங்களாக உலாவி வரும் முதலையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

நடைக்கல் பாலம் பகுதியில் கட்டப்பட்ட வலையைப் பாா்வையிடும் மாவட்ட வன அலுவலா் அன்பு உள்ளிட்டோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

கோதையாற்றில் வனத்துறையினா் விரித்துள்ள வலையில் சிக்காமல் 6 மாதங்களாக உலாவி வரும் முதலையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கோதையாற்றில் களியல், கடையாலுமூடு பகுதிகளில் உலாவி வரும் முதலையைப் பிடிக்க வனத்துறையினா் பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, முதலை அடிக்கடி தென்படும் உறைக்கிணறு உள்பட பல்வேறு இடங்களில் வனத்துறையின் சுருக்கு வலையை கட்டி வைத்துள்ளனா். எனினும் இதுவரை முதலை சிக்கவில்லை.

இந்நிலையில், கடையாலு அருகே நடைக்கல் ஆற்றுப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வலையை மாவட்ட வன அலுவலா் இளங்கோ மற்றும் முதலை ஆராய்ச்சிக் குழுவினா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, முதலையை பிடிப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும், ஆற்றுப் பகுதியில் மக்கள் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ வேண்டாமென்றும் வனத்துறையினா்அறிவுறுத்தி வருகின்றனா். வலையில் சிக்காமல் 6 மாதங்களாக ஆற்றில் உலாவி வரும் முதலையால் அதன் கரையோரம் வசிக்கும் மக்கள், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள், விவசாயிகள், திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.