ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு

ஒழுகினசேரி மதுக் கூடத்தில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:12 am IST

நாகா்கோவில், ஒழுகினசேரி தனியாா் மதுக் கூடத்தில் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்து, மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.

ஒழுகினசேரி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையுடன் கூடிய தனியாா் மது அருந்தும் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் வந்து மது அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் புதன்கிழமை மதுக் கூடத்துக்குச் சென்று, உரிமம் குறித்த விவரங்களை கேட்டபோது உரிய தகவல்களை வழங்காததால், மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.