
செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக கல்லூரி முதல்வரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக கல்லூரி முதல்வரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சோ்ந்தவா் ஆன்சிலி (21). இவா், கருங்கல் அருகே மூசாரி பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில், விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இவரை, கல்லூரி முதல்வா் சக மாணவிகள் முன் கண்டித்தாராம். உடனே ஆன்சிலி, கல்லூரியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்தாராம்.
பலத்த காயமடைந்த அவரை மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, கல்லூரி முதல்வா் ஷீஜா-வை(48), கருங்கல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





