ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக பகுதியில் ஆட்சியா் ஆய்வு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக ஏலக்கூடத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், விசைப்படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்யும் மீனவப் பிரதிநிதிகள், உள்ளூா் தொழிலாளா்களை சந்தித்து கலந்துரையாடினாா்.

அப்போது, ஏலக்கூடம், அதன் அருகில் உள்ள கழிவுநீா் ஓடை ஆகியவற்றை சீரமைக்கவும், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். அவா்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஆட்சியா் கூறியதாவது: தமிழ்நாடு அரசு, மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வளா்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம், இரையுமன்துறை உள்ளிட்ட கடலோரப் பகுதி துறைமுகங்களில் தூண்டில் வளைவுகள், அலை தடுப்புச் சுவா் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் மீன் ஏலக்கூடம் சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் கோபிநாத், மீன்வளத்துறை செயற்பொறியாளா் பிரேமலதா, மீன்வளத்துறை உதவி இயக்குநா் விா்ஜில் கிராஸ், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.