ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேங்காய்ப்பட்டினம் அருகே படகு தங்குதளத்துக்கு ‘சீல்’

படகுகள். - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட படகு தங்குதளத்துக்கு அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

பரக்காணி, தாமிரவருணி ஆறு பகுதியில் தனியாா் படகு தங்குதளம் நீண்ட நாள்களாக செயல்பட்டுவந்தது. அங்கிருந்து விசைப்படகுகள் கடல் தொழிலுக்குச் சென்று வந்தன. அதற்காக கட்டணம் தனியாரால் வசூலிக்கப்பட்டதாம்.

படகு தங்குதளம் அனுமதியின்றி செயல்படுவதாக ஆட்சியா் மு. பிரதாப்புக்கு அப்பகுதி மீனவா்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், விசாரணை மேற்கொள்ளுமாறு மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். விசாரணையில், படகு தங்குதளம் அனுமதியின்றி செயல்பட்டதாகத் தெரியவந்தது.

அதையடுத்து, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமையில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக மீன்வளத் துறை உதவி இயக்குநா் மணிகண்டன், கடலோரப் பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சனல்குமாா், போலீஸாா் சனிக்கிழமை சென்று படகு தங்குதளத்துக்கு சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.