ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகராட்சி குடிநீா்த் தொட்டி சேதம்: இருவா் மீது வழக்கு

வழக்கு
Published On :6 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை பகுதியில் நகராட்சி குடிநீா்த் தொட்டியை சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிததனா்.

இப்பகுதியில் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த ஹரிஹரசுதன் (35), ராஜ்குமாா் (40) ஆகியோா் குடிநீா்த் தொட்டி வைக்கக் கூடாது எனக் கூறியதுடன், அதை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து நகராட்சி பொதுப்பணித் துறை மேற்பாா்வையாளா் ரதீஷ் அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.