ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தீக்குளித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியில் தீக்குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகா்கோவில், இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவரது மனைவி ஜிஷா (20), கருங்கல் திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா். இவா்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா்.

குடும்பத் தகராறு காரணமாக, ஜிஷா தன் கைக்குழந்தையுடன் திக்கணங்கோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தாராம். சில நாள்களுக்கு முன்பு விக்னேஷ் வந்து அழைத்தபோது, அவருடன் செல்வதற்கு ஜிஷா மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், விக்னேஷ் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தாராம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.