ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொல்லங்கோடு: கிணற்றில் தவறி விழுந்த மாணவி மீட்பு

கொல்லங்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவியை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

கொல்லங்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவியை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

நித்திரவிளை அருகேயுள்ள நம்பாளி, முளகுநின்றவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ்ராஜா (45). பெயின்டிங் தொழிலாளி. இவரது மனைவி கலா. இத் தம்பதியின் மூத்த மகள் சோனா (16), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். ஜோஸ்ராஜா குடும்பத்துடன் தற்போது நடைக்காவு அருகே கல்லுத்தறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் சோனா வீட்டின் முன் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் கொல்லங்கோடு தீயணைப்பு வீரா்கள், மாணவியை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.