குமரி மரியா மருத்துவக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் உள்ள மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் உள்ள மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது.
By Syndication
Syndication
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் உள்ள மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, மரியா பொறியியல் கல்லூரி முதல்வா் ஒய். சுஜா் தலைமை வகித்தாா். அருள்பணியாளா் ஆண்டனி இறை வேண்டல் செய்தாா். மரியா கல்விக் குழுமத் தலைவா் ஜி. ரசல்ராஜ் குத்துவிளக்கேற்றினாா். துணைத் தலைவா் பி. ஷைனி தெரசா முன்னிலை வகித்தாா். மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் டி. பெனோ வாழ்த்திப் பேசினாா்.
இந்திய மருந்து முறைக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினா் பி.எஸ். ஆா்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.
கேரள மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மனோஜ்குமாா், தேசிய ஆயுா்வேத ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி அலுவலா் கிருஷ்ணராவ், கன்னியாகுமரி, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி ஆகியோா் கருத்துரையாற்றினா்.
மரியா கல்விக் குழும ஒருங்கிணைப்பாளா் குமாரி தீபா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் நின்சி வில்சன் நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது