ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உண்ணாவிரதம்

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Published On :9 ஜனவரி 2024, 11:55 am IST

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 இப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி. சசிகுமார், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லார்மின் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் என். ரெஜிஸ்குமார், மாவட்ட பொருளாளர் எபிலைசியஸ் ஜோயல், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் டி.ஆர். மேரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம். பிந்து, நிர்வாகிகள் எம். ரகுபதி, கே. சுனில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

 போராட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். லீமாரோஸ் பேசியதாவது: தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடுவதற்கும், மதுவுக்கு அடிமையான மக்களை மீட்டெடுக்கவும், மாணவர், இளைஞர்களிடம் போதைப் பழக்கத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்தெடுப்பதற்கும் தொடர் இயக்கங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கங்கள் சார்பில் நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

இப் போராட்டத்தில் முன்சிறை வட்டார இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச்  செயலர் கே.சி. விக்டர், துணைச் செயலர் சந்தோஷ், வட்டாரக் குழு உறுப்பினர் அனீஷ், நடைக்காவு ஊராட்சித் தலைவி மேரி ஸ்டெல்லாபாய் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.