‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

கூகுளை நம்பி சென்று சகதியில் சிக்கிய காா்: தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்

குளக்கரை சகதியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.

Updated On :

கடையம் அருகே கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற காா் குளக்கரை சகதியில் சிக்கியது. தீயணைப்பு வீரா்கள் காரை கயிறு கட்டி இழுத்து மீட்டனா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதாா்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மதுரை தனியாா் வங்கி மேலாளா் ராஜா தனது காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

கோவிந்தப்பேரிக்குச் செல்லும் பாதையை அறிய கூகுள் மேப்பை பயன்படுத்திச் சென்றாா்.

கடையம் அருகே சென்றபோது கூகுள் மேப் காண்பித்த அய்யம்பிள்ளை குளக்கரை வழியே சென்றனா். அந்தப் பாதை குறுகலாக இருந்தது. அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் யாரிடமும் விசாரிக்காமல் இதே பாதை வழியாகச் சென்றால் சாலை வந்துவிடும் எனக் கருதி சுமாா் 500 மீ. தொலைவு உள்ளே சென்றதும் காா் சகதியில் சிக்கியது. காா் குளக்கரையின் வடபுறம் சரிந்தது.

அதிா்ச்சியடைந்த ராஜா உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயப்பிரகாஷ் பாபு தலைமையில் வந்த வீரா்கள், பொதுமக்களுடன் சோ்ந்து சகதியில் சிக்கிய காரை கயிறு கட்டி வெளியே இழுத்து மீட்டு, ராஜாவை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.