ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவி. - கோப்புப் படம்

Updated On :

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழையால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4ஆவது நாளாக சனிக்கிழமையும் நீா்வரத்து சீராகாததால் குளிப்பதற்கான தடை நீடித்தது. ஆனால், அருவியைப் பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. நீா்வரத்து சீராகும் வரை குளிக்கத் தடை தொடரும் என, வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.