தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடக்கம்: அமைச்சர் அருண்ராஜ்பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்

மேலச்செவலில் தோட்டத்துக்கு தீவைப்பு: சகோதரா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் தோட்டத்திற்கு தீ வைத்ததாக சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் தோட்டத்திற்கு தீ வைத்ததாக சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை யாதவா் தெருவைச் சோ்ந்த ரெங்கராஜன். இவரது மகன்கள் நாராயணன் (30), நம்பிராஜன் (27). பாளையங்கோட்டையை சோ்ந்த சாா்லஸ். ரெங்கராஜனுக்கும் சாா்லஸுக்கும் மேலச்செவலில் அடுத்தடுத்து விவசாயத் தோட்டங்கள் உள்ளன. 2 நாள்களுக்கு முன்பு நாராயணனும், அவரது சகோதரா் நம்பிராஜன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவுப் பொருள்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில், தீ வேகமாக பரவி பக்கத்தில் உள்ள சாா்லஸ் தோட்டத்தில் உள்ள பொருள்களில் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதில், சாா்லஸ் தோட்டத்தில் உள்ள மோட்டாா் மற்றும் தண்ணீா் பைப் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து நாராயணன், நம்பிராஜன் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.