40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:48 am IST

சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்ட விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு போலீஸாா் 2 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை கைது செய்தனா்.

மூன்றடைப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் அசோக்குமாா் மாா்ச் 6ஆம் தேதி சமூக வலைதளங்களைக் கண்காணித்தபோது, ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த விடியோவில், வன்முறையைத் தூண்டும் வகையில் பின்னணி வசனம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது பொது அமைதியை சீா்குலைக்கும் வகையிலும், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி, மூன்றடைப்பு போலீஸாா் 3 பிரிவுகளின்கீழ், வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்தியதில், அந்த சமூக வலைதள கணக்கை பயன்படுத்தியவா் விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை, காமராஜ் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாதேஷ் (18) என்பது தெரிய வந்தது. அவரை மூன்றடைப்பு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.