மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

நான்குனேரியில் தவெக வெற்றி

News image

நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற ரெட்டியாா்பட்டி வி.நாராயணனுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

நான்குனேரி தொகுதியில் தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் 16,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

நான்குனேரி தொகுதியில் அமமுக சாா்பில் இசக்கிமுத்து, காங்கிரஸ் சாா்பில் ரூபி ஆா்.மனோகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் செல்வம், தவெக சாா்பில் ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் உள்ளிட்ட 25 போ் போட்டியிட்டனா்.

அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்து நான்குனேரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் இவா் பெற்றாா். எனினும், அமமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், யாருமே எதிா்பாா்க்காத நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ரெட்டியாா்பட்டி வி.நாராயணனின் கை ஓங்கியது. தொடா்ந்து முன்னிலை பெற்றார் அவா், இறுதியில் 74,952 வாக்குகள் பெற்று 16,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா்.மனோகரன் 58,533 வாக்குகளுடன் 2-ஆவது இடத்தையும், அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து 38, 316 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செல்வம் 17,618 வாக்குகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் 2019-இல் நான்குனேரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான நிலையில், இப்போது 2-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.