ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வரலாற்றில் சுயேச்சையாக களம் கண்டு வெற்றி வாகை சூடிய பெருமைக் குரியவர் மு.அப்பாவு.
1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும், 2001 இல் சுயேச்சையாகவும், 2006 இல் திமுக சார்பிலும் போட்டியிட்டு ராதாபுரம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெரு மைக்குரியவர்.
இவருக்கு மறக்கமுடியாத அனுபவங்களை தந்து, நீண்டதொரு சட்டப்போராட்டத்தை மேற்கொள்ள வழிவகுத்தது 2016 சட்டப்பேரவைத் தேர்தல்.
அத்தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் களமிறங்கிய அப்பாவுவை எதிர்த்து அதிமுக சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டார். 69, 541 வாக்குகள் பெற்ற அப்பாவு, ஐ.எஸ். இன்பதுரையை விட 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் கண்ட தோல்வியாக அது அமைந்தது.
அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடை பெறவில்லை எனவும், தபால் வாக்குகளையும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் அப்பாவு.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019 இல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மறு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஐ.எஸ். இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடவே மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட் டது.
2016 ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதி முடிவுகளும் அது தொடர்பான சர்ச்சைகளும் முடிவடையாத நிலையில், மீண்டும் 2021 ஆம் ஆண்டு அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு, அதிமுகவின் ஐ.எஸ். இன்பதுரையை 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.
49 வாக்குகளில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு நீண்டதொரு சட்டப் போராட்டம் மேற்கொண்ட அப்பாவு, மக்கள் தந்த இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசு சட்டப்பேரவைத் தலைவரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரம்: கடும் போட்டியில் திமுக-பாஜக!

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் மனு தாக்கல்

கீழ்வேளூரில் குறைந்து வரும் வாக்குப் பதிவு சதவீதம்
ராதாபுரம் தொகுதியில் பாஜகவின் வெற்றிக் கணக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


