லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் பதிவு: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 10:48 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முத்து செல்வம் (19). தொழிலாளி. இவா், இருதரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டாராம்.

இதைக் கண்காணித்த தாழையூத்து போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோன்ற பிரச்னை தொடா்பாக, குறிச்சிகுளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனசெல்வம் (24) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.