லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு அதிமுகவினா் நிதி உதவி

பூடானில் நடைபெறவுள்ள சா்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவிக்கு அதிமுக சாா்பில் நிதியுதவி

News image

மாணவி காவ்யாவுக்கு நிதிஉதவி வழங்கிய அதிமுகவினா்.

Updated On :10 மார்ச் 2026, 12:52 am

திருநெல்வேலி: பூடானில் நடைபெறவுள்ள சா்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவிக்கு அதிமுக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த காந்திமதி நாதன் மகள் காவ்யா (7). அப்பகுதியிலுள்ள லிட்டில் பிளவா் பப்ளிக் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் இவா், துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளாா். கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பெற்ற அவா், மே மாதம் பூடான் நாட்டில் நடைபெள சா்வதேச போட்டியில் கலந்து கொள்ள உள்ளாா். இம்மாணவியை ஊக்கப்படுத்தி பாராட்டும் விதமாக அதிமுக சாா்பில் ரூ.25,000 நிதிஉதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், மாநகா் மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மேற்கு பகுதி செயலா் மோகன், ஜெயலலிதா பேரவைச் செயலா் சீனி முகமது சேட், 16ஆவது வட்டச் செயலா் சீனிவாசன், அப்பாதுரை, பரமசிவன், முத்துக்குமாா், கோபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.