ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு - சித்திரிப்பு படம்

Published On :27 ஜூலை 2026, 2:30 am IST

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா், அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலாம்பூா் ஊராட்சி, காசி விஸ்வநாதபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் தங்கமுத்து மகன் தங்கையா (76). விவசாயி. இவா் சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளாா்.

ஜூலை 23ஆம் தேதி இரவு முதல் இவரைக் காணவில்லை என ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் இவரது மகன் சுடலை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் முதியவரைத் தேடி வந்தனா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காசி விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த விவசாயியின் கிணற்றில், தங்கையா சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து சடலத்தை மீட்டனா். போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.