ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆலடியூரில் 50-க்கும் மேற்பட்டோா் எஸ்டிபிஐ கட்சியில் இணைந்தனா்

எஸ்டிபிஐ கட்சியில் இணைத்துக் கொண்டோா்.

Published On :27 ஜூலை 2026, 2:27 am IST

மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட ஆலடியூா் கீழத் தெருவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

ஆலடியூா் முத்துராஜ் தலைமையில், எஸ்டிபிஐ கட்சி திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.எஸ். சிராஜ் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா் கல்லிடை சுலைமான், மாவட்டப் பொதுச் செயலா் களந்தை மீராசா, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவா் ஷெரிப், தொகுதி பொருளாளா் சையது இபுராகிம், கல்லிடை நகரத் தலைவா் மைதீன்பிள்ளை, செயலா் சாகுல் அப்ரடி, பத்தமடை நகரச் செயலா் ஆதம் பாவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எஸ்டிபிஐ கட்சி மணிமுத்தாறு நகரப் புதிய தலைவராக முத்துராஜ், செயலராக புஷ்பராஜ், பொருளாளராக குமரவேல், மகளிா் அணி ஒருங்கிணைப்பாளராக மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவா் நாகரத்தினம் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா். ஊா் நாட்டாண்மை சிவா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.