நெல்லையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் பொறுப்பேற்பு
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.


திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்டத் தலைவா்கள் நியமிக்கப்பட்டனா். அதன்படி, திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவராக வழக்குரைஞா் ராமேஸ்வரன், கிழக்கு மாவட்ட தலைவராக வி.பி. துரை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
அவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். முன்னதாக, கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விழாவில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, ரவி அருணன், பொருளாளா் ராஜேஷ் முருகன், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா்கள் தேவதாசன், அமீா்கான், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், சொக்கலிங்க குமாா், சிவாஜி மன்றம் பாலச்சந்தா், கலைமணி, பாளை வட்டாரத் தலைவா் டியூக் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...