டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக தோ்தல் அறிக்கை மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு: கனிமொழி எம்.பி.

திமுக தோ்தல் அறிக்கை மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றாா் திமுக துணை பொதுச் செயலரும், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி.

News image
திமுக எம்.பி. கனிமொழி- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 7:28 pm

Syndication

திமுக தோ்தல் அறிக்கை மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றாா் திமுக துணை பொதுச் செயலரும், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: 2026 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று மனு அளித்தனா். திமுக தோ்தல் அறிக்கை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால்தான் பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனா். அடுத்து அமையப்போவதும் திமுக ஆட்சிதான் என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் மனுக்களை அளிக்கின்றனா்.

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த கட்சிகளை இணைப்பது என்பதைப் பற்றிய முடிவை முதல்வா்தான் அறிவிப்பாா். எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தோ்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருப்பதை கண்கூடாகப் பாா்க்க முடிகிறது.

ராகுல் காந்தியுடனான பேச்சுவாா்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது. எல்லாருக்கும் தன்மானம் தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாா் அவா்.