டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கட்டட தொழிலாளா் அமைப்பு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு

News image
சென்னையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த தமிழக கட்டட தொழிலாளா்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தினா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக கட்டட தொழிலாளா்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தினா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழக கட்டட தொழிலாளா்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது.

இச் சங்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தச் சங்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து சங்கத்தின் மாநில தலைவா் எஸ். மகாலிங்கம் ஆதரவு தெரிவித்தாா்.

சங்கத்தின் நிா்வாகிகள் வழக்குரைஞா் சக்திவேல், பொருளாா் பேச்சியப்பன், அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.