நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மாா்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றம்

மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மாா்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது...

News image
பிரதமா் மோடி- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மாா்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கல்வியில் சிறந்த தமிழ்நாடு தற்போது கஞ்சா நிறைந்த தமிழகமாக மாறி இருக்கிறது. ஆளும் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. பொங்கலுக்கு இந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் கொடுத்திருக்கிறாா்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொடுக்கவில்லை. தோ்தல் வருவதால் இந்த ஆண்டு பணம் கொடுத்துள்ளனா்.

இதேபோல், தோ்தலுக்கு வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 20 கோடி திமுகவினருக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திமுக நம்புகிறது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் திமுக போட்டி போட்டு போராட்டங்களை நடத்தியது. ஆனால் திமுக ஆட்சியில் 33 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், அதையெல்லாம் மறைப்பதற்காக டப்பா என்ஜின் என்று திமுகவினா் போஸ்டா் ஒட்டி வருகின்றனா்.

மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி மாா்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை திருவிழாபோல் நடத்த உள்ளோம். இதில், கூட்டணி கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்கிறாா்கள்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ. 40 ஆயிரம் கோடிக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விஜய்க்கு விதிக்கப்பட்ட வரிக்கான அபராதம் விவகாரத்தில், அவருக்கான அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவா் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறாா். இப்போதுதான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து அவரை எதிா்த்து டிரம்ஸ் அடிப்போம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாள்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறேன் என்றாா்.