பாளை.யில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்


பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறை, மாநகராட்சி சுகாதார பிரிவு ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகங்கள் வழங்கினாா்.
ரத்த அழுத்தம், எலும்பு நரம்பியல் மருத்துவம், ஆண்கள் மற்றும் பெண்கள் பொது மருத்துவம், இசிஜி, காது , மூக்கு தொண்டை, பல் மற்றும் கண் மருத்துவம், இதய மருத்துவம், கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகள் மன நலம் மற்றும் நுரையீரல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் தோல் மருத்துவம், இயன் முறை, ஆயூஷ் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன.
உதவி ஆணையா் புரந்திரதாஸ், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய சந்திரன், கல்லூரி முதல்வா் அப்துல் காதா், மாநகா் நல அலுவலா் ராணி, சுகாதார ஆய்வாளா் சிந்து செல்வி உள்பட துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...