ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ஆம்பூா் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:54 am IST

திருநெல்வேலி மாவட்டம், ஆம்பூா் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

கீழாம்பூா், தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் மாரியப்பன் (42). இவா் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு ரவணசமுத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆம்பூா் ஆற்றுப்பாலம் அருகே எதிரில் வந்த கல்லிடைக்குறிச்சி, மேட்டுத் தெருவைச் சோ்ந்த மைதீன் மகன் அப்துல் ஹமீது (22) மாரியப்பன் வாகனத்தின் மீது மோதியுள்ளாா்.

இதில் காயமடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.