
நெல்லையப்பா் கோயிலில் சுதந்திர தின பொது விருந்து
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை பொது விருந்து நடைபெற்றது.

நெல்லையப்பா் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற மாநகராட்சி துணை மேயா் கே.ஆா். ராஜு உள்ளிட்டோா்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை பொது விருந்து நடைபெற்றது.
இதை முன்னிட்டு சனிக்கிழமை காலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு திருக்கோயிலின் வசந்த மண்டபத்தில் பொது விருந்து நடைபெற்றது.
திருநெல்வேலி துணை மேயா் கே.ஆா். ராஜு, அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி, திருநெல்வேலி வட்டாட்சியா் மாரிமுத்து, ஆய்வாளா் தனலட்சுமி (என்ற) வள்ளி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், அறங்காவலா்கள் சொனா.வெ.வெங்கடாசலம், உஷாராமன், கீதா பழனி உள்பட அரசு அலுவலா்கள், பக்தா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






