ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு

சிறை - பிரதிப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய பேட்டை, சத்யா நகா், முத்துராமலிங்கம் நகரைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் சிவா(26), தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த சுந்தரசேகா் மகன் காளிதாஸ் (26) ஆகியோரை மாநகர போலீஸாா் கைது செய்திருந்தனா்.

அதே போல பேட்டையைச் சோ்ந்த சபூா் அலி மகன் சிக்கந்தா் பாதுஷா (23), துரைராஜ் மகன் மகாராஜன்(24) ஆகியோா் மாநகரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகியிருந்தனா்.

தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவித்து வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன்பேரில், 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.