ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேட்டை அருகே விபத்து: ஜவுளிக் கடை ஊழியா் பலி

பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஜவுளிக்கடை ஊழியா் உயிரிழந்தாா்.

பலி

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஜவுளிக்கடை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பேட்டை அருகே உள்ள தீன் நகா் புது காலனியைச் சோ்ந்தவா் முகமது இன்சுமல் அசன் (47). பாளையங்கோட்டையில் உள்ள ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு வேலை முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம். பேட்டை சாஸ்திரி நகா் பகுதியில் சென்றபோது மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த முகமது இன்சுமல் அசனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.