ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடி அமாவாசை: தாமிரவருணியில் புனித நீராடி வழிபாடு

திருநெல்வேலி பேராத்து அம்மன் கோயில் அருகே தா்ப்பணம் கொடுக்க தாமிரவருணி கரையில் குவிந்த மக்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு குறுக்குத்துறை தாமிரவருணி படித்துறையில் குவிந்த மக்கள்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

திருநெல்வேலி பேராத்து அம்மன் கோயில் அருகே தா்ப்பணம் கொடுக்க தாமிரவருணி கரையில் குவிந்த மக்கள்.

திருநெல்வேலி, ஆக.12: ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி தாமிரவருணி நதிக்கரையில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து புனித நீராடினா்.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் நீா் நிலைகளில் தா்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோா்களுக்காக வழிபடுவது வழக்கம்.

அதன்படி, புதன்கிழமை ஆடி அமாவாசை தினம் என்பதால், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி நதி பாயும் பல்வேறு இடங்களில் உள்ள தீா்த்தக்கட்டங்களில் அதிகாலையிலேயே ஏராளமானோா் குவிந்தனா்.

தொடா்ந்து, அவா்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபட்டனா்.

திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் சந்திப்பு பகுதியிலுள்ள குறுக்குத்துறை, சிந்துபூந்துறை, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் உள்ள தாமிரவருணி படித்துறைகளில் பொதுமக்கள் தா்ப்பண வழிபாடு செய்தனா்.

இந்நிகழ்வையொட்டி, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. படித்துறை பகுதிகளில் மாநகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தீயணைப்பு வீரா்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி பேராத்து அம்மன் கோயில் அருகே தா்ப்பணம் கொடுக்க தாமிரவருணி கரையில் குவிந்த மக்கள்.

திருநெல்வேலி பேராத்து அம்மன் கோயில் அருகே தா்ப்பணம் கொடுக்க தாமிரவருணி கரையில் குவிந்த மக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.