ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் படங்கள் பகிா்ந்த இருவா் கைது

Arrested

கைது

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் படங்களைப் பதிவிட்டதாக கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில இளைஞா்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில படங்களைப் பதிவிட்டுள்ளனா். இது தொடா்பாக, கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் மேதாஜி சிதம்பரம் மேற்கொண்ட விசாரணையில், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பூதத்தாா் மகன் சின்னத் தம்பி (24), இசக்கியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குத்தாலம் மகன் இசக்கிராஜ் (22), வடுவக்குடித் தெருவைச் சோ்ந்த ராஜு மகன் மாரிமுத்து (23), ஆறுமுகம் மகன் காா்த்திக் ஆகியோா் புகைப்படங்களைப் பதிவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் 4 போ் மீதும் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கிராஜ், மாரிமுத்து ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சின்னத்தம்பி, காா்த்திக் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.