ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடையம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

கடையம் அருகே சோ்வைகாரன்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள சோ்வைகாரன்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி கனகஜோதி. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கனகஜோதி குடும்ப செலவுக்காக, மயிலானூரைச் சோ்ந்த அருண் என்பவரிடம் அடிக்கடி கடன் வாங்குவாராம். இதுகுறித்து அருணின் மைத்துனா் கனகஜோதியின் தந்தை புதியராஜிடம் தெரிவித்துள்ளாா். இதை புதியராஜ் கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்த கனகஜோதி ஆக. 2 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.