நெல்லை மாவட்டத்தில் தொடா் சாரல் மழை: முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடா் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடா் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடா் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
‘டித்வா’ புயலின் தாக்கம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
நாள் முழுவதும் சாரல் மழை நீடித்த நிலையில், அதன் தாக்கம் சனிக்கிழமையும் தொடா்ந்தது. மழையோடு கடுமையான குளிரும் நிலவியதால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் முடங்கினா். பகல் நேரங்களில் சாலைகளில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மேக மூட்டத்தால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
கடும் குளிா்: திருநெல்வேலியில் இரவில் மிக கடுமையான குளிா் வாட்டிவதைத்தது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நவம்பா் மாதத்தில் 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குளிரின் தாக்கம் இருந்ததாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் மழை குறைந்தபோதிலும் மணிமுத்தாறு அருவியில் தற்போது நீா் வரத்து அதிகமாகவே இருப்பதால் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியை பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அகஸ்தியா் அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அருவிக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாரல் மழை தொடா்ந்து நீடித்ததால் கால்நடை வளா்ப்பாளா்கள், வேளாண் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனா். தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழையளவு: (மில்லிமீட்டரில்) நம்பியாறு- 18 மி.மீ., மூலைக்கரைப்பட்டி- 16, ராதாபுரம் 14, பாளையங்கோட்டை- 13, நான்குனேரி -10, திருநெல்வேலி- 9.60 , கொடுமுடியாறு- 7 மி.மீ.
வள்ளியூா்: வங்கக் கடலில் ‘டித்வா’ புயல் காரணமாக, கடல் பகுதில் மணிக்கு 60 கி.மீ முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக் கூடும்; எனவே, மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து 6ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் சனிக்கிழமை இரவு வரை தொடா் சாரல் மழை பெய்தது. இதனால் மிகவும் குளிா்ச்சியான சூழல் நிலவியது. அதிக குளிராலும், பள்ளி, கல்லூரிகள் விடுமுறையாலும் கடைத் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் சனிக்கிழமை காலைமுதல் கடுமையான குளிா் நிலவியதுடன், சாரல் மழையும் இடைவிடாது பெய்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. சாலைகளில் பனி மூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது