ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2026-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2026-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
By Syndication
Syndication
2026-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருது சா்வதேச மகளிா் தினத்தன்று (மாா்ச் 8) தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுடன் ரூ.1.5 லட்சத்துக்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதுக்கு டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
பெண்களுக்கான இச்சமூகசேவையை தவிா்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கையேடாக தயாா் செய்து (தமிழ், ஆங்கிலம்) தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி-9 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது