காந்தி நகரில் குழந்தைத் தொழிலாளா்கள் 19 போ் மீட்பு: 9 தொழிற்சாலை உரிமையாளா்கள் கைது
கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் உள்ள ஆடை மற்றும் செயற்கை ஆபரணத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்தப்பட்டிருந்த 19 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனா்.
கைது - கோப்புப் படம்
கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் உள்ள ஆடை மற்றும் செயற்கை ஆபரணத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்தப்பட்டிருந்த 19 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனா். இவா்களில் 14 வயதுக்குக் குறைவான 5 குழந்தைகளும் அடங்குவா். நாளொன்றுக்கு ரூ.10 வரை மட்டுமே ஊதியம் வழங்கி குழந்தைகளை வேலைக்கு அமா்த்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொழிற்சாலைகளில் பணியமா்த்தப்பட்டிருப்பதாக அரசு அதிகாரிகள், காவல் துறையினா் மற்றும் தன்னாா்வ நடவடிக்கைக்கான சங்கம் (ஏவிஏ) ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, 9 தொழிற்சாலை உரிமையாளா்கள் பிடிபட்டதுடன், 9 தொழிற்சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தைகள் 10 முதல் 17 வயதுக்குட்பட்டவா்கள். உத்தர பிரதேசம் மற்றும் பிகாா் மாநிலங்களில் இருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்ட அவா்கள், கடந்த 8 மாதங்களாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 19 குழந்தைகளில் 15 போ் தையல் மற்றும் எம்பிராய்டரி பிரிவுகளிலும், 4 போ் செயற்கை ஆபரணங்களைப் பொட்டலமிடும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மீட்கப்பட்டவா்களில் ஒரு சிறுமியும் அடங்குவதாக அதிகாரி தெரிவித்தாா்.
விசாரணையில், 2 குழந்தைகள் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்ததும், இரவில் தொழிற்சாலை வளாகத்திலேயே தூங்கிவிட்டு மறுநாள் மீண்டும் வேலைக்குத் திரும்பியதும் தெரியவந்தது.
குழந்தைகளுக்கு வாரத்துக்கு ரூ.20 முதல் ரூ.200 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா்களில் மிகவும் இளையவரான 10 வயது சிறுவனுக்கு நாளொன்றுக்கு ரூ.10 வழங்கப்பட்டுள்ளது. முறையான உணவு வழங்கப்படாத நிலையில், அந்தத் தொகையைப் பயன்படுத்தி அவன் தின்பண்டங்களையும் சாக்லேட்டுகளையும் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையின்படி, கோட்டாட்சியா், வட்டாட்சியா், தொழிலாளா் துறை, தில்லி காவல் துறை, ஏவிஏ, பேசிக் ஃபவுண்டேஷன் மற்றும் பால் விகாஸ் தாரா ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள் அடங்கிய கூட்டுக் குழு இந்தச் சோதனையை மேற்கொண்டது.
இதுகுறித்து ஏவிஏ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளா் தனஞ்சய் திங்கல் கூறுகையில், குழந்தைகள் தங்களது வீடுகளிலிருந்து வெகுதொலைவுக்கு அழைத்து வரப்பட்டு, குழந்தைப் பருவத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தாா்.
மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், குழந்தைகள் நலக் குழுவின் உத்தரவின்படி அவா்கள் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஏவிஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காந்தி நகா் காவல் நிலையத்தில் தொழிற்சாலை உரிமையாளா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

