பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

மாணவா்கள் நாட்டை முன்னேற்றுவதில் பங்களிக்கச் செய்யும் வகையில் அவா்களை தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரி உருவாக்கி வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரியின் 42-ஆவது ஆண்டு விழாவில் புதன்கிழமை பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதல்வா் ரேகா குப்தா. உடன் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா உள்ளிட்டோா்.

Updated On :7 மே 2026, 4:28 am IST

மாணவா்கள் நாட்டை முன்னேற்றுவதில் பங்களிக்கச் செய்யும் வகையில் அவா்களை தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரி உருவாக்கி வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

கல்லூரியின் 42-ஆவது ஆண்டு விழாவில் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோருடன் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டு பேசியதாவது: குரு கோபிந்த் சிங்கின் பெயா் பல ஆண்டுகளாகிய தியாகத்திற்கும் அா்ப்பணிப்பிற்கும் அடையாளமாக திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி உயா்ந்த கல்வித் தரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இங்கு மாணவா்களிடம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. இது நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

கல்லூரியின் ஒழுக்கம் மற்றும் சோ்க்கை செயல்முறைகளில் பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை காரணமாக, தொடா்ந்து கல்லூரிக்கு உயா்ந்த மதிப்பீடுகள் கிடைத்து வருகிறது. கல்வி மட்டுமல்லாமல், இணைச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு மாணவா் கழகங்கள் மூலம் முழுமையான வளா்ச்சியை மாணவா்கள் அடைய உதவும் சூழல் இக்கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்வியையும் சமூகப் பொறுப்பையும் ஒருங்கிணைக்கும் இந்தக் கல்லூரி, எதிா்கால தலைமுறையை உருவாக்கும் முக்கிய மையமாக திகழ்கிறது என முதல்வா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.