திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தில்லி சட்டப்பேரவைக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தில்லி சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மூன்றாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்தது, அது குறித்து காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

News image

தில்லி சட்டப்பேரவை (கோப்புப்படம்) - PTI

Updated On :27 மார்ச் 2026, 8:28 pm

தில்லி சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மூன்றாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்தது, அது குறித்து காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவையில் குண்டுவெடிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்திய மின்னஞ்சல்கள் குறித்து விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு வந்தனா். இந்த மின்னஞ்சல்கள் மாா்ச் 24 முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை பெறப்பட்டன. எந்தவொரு அலட்சியமும் இல்லாமல் இந்த விஷயத்தை விசாரிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த பிரச்சினை தீவிரமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில மின்னஞ்சல்கள் பல்வேறு அமைப்புகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அனுப்பப்பட்டதாகவும், விரைவான நடவடிக்கைக்கு காவல்துறை உறுதியளித்துள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது. நுழைவாயில்களில் போதுமான சிசிடிவி கண்காணிப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட நுழைவு முறையை உறுதி செய்யுமாறு சட்டப்பேரவை செயலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.